20 வருடங்களுக்கு முன்னர் துாத்துக்குடியில் உள்ள சைவ ஹோட்டல்களின் வாசலில், அன்று மதியம் என்ன வகையான சாம்பார் (வெண்டைக்காய் சாம்பார், கத்தரிக்காய் சாம்பார்....) என்றும், என்ன வகையான கூட்டுகள் என்று ஒரு போர்டில் எழுதி வைத்திருப்பார்கள். ஒரு நாள் வைத்த சாம்பார் மற்றும் கூட்டு வகைகள் மறுநாளுக்கு இருக்காது. இதனால் பலர் ஒரே ஓட்டல்களில் தினமும் சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று இதுபோன்று மதிய உணவின் விபரத்தை எழுதப்பட்ட போர்டுகளை எங்குமே பார்க்க முடிவதில்லை.
.
இன்று சைவ ஹோட்டல்கள் எல்லாம் அன்றைய தேதியில் வரும் வாடிக்கையாளர்களை மட்டுமே கருத்தில் கொண்டு வியாபாரம் செய்கிறார்கள். இன்றைய வாடிக்கையாளர் நாளையும் நமது கடைக்கு வந்து மதியம் சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று மதிய உணவுகளில் முன்னர் போன்று விதவிதமான மெனுக்களை குறைந்த பட்சம் வித்தியாசமான சாம்பார்களைகூட தருவதில்லை. சில ஹோட்டல்களில் காய்கறிகள் மாறினாலும், சாம்பாரின் சுவை ஒரே மாதிரியாகவே இருக்கின்றது. பல நேரங்களில் நமக்கு ஒரு ஹோட்டலின் தரம் பிடித்திருக்கும் ஆனால் அங்குள்ள மெனு திரும்ப திரும்ப வருவதால், வாடிக்கையாளர்கள் வேறு வழியின்றி புதிய மெனுவுக்காகவேறு ஹோட்டலை தேடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். சைவ ஹோட்டல்களில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சுவையானது தற்போது மக்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி சென்று கொண்டிருக்கின்றது.
No comments:
Post a Comment