அரசு ஊழியர்கள் பலர் பணிநிறைவு அடைந்தவுடன், தனியர் கம்பெனிகளில் பணிக்கு சேருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். அரசு மருத்துவர்கள் பணி நிறைவு பெற்றதும், தனியர் மருத்துவ கல்லுாரியில் உடனே பணிக்கு சேருகின்றார்கள். அதுபோலவே, வருவாய் துறையில் பணிபுரிந்துவர்களும் தனியார் கம்பெனியில் பணிக்கு சேருகின்றார்கள். பணிநிறைவு பெற்றதும் இவ்வாறான மாற்றுப் பணியில் உடனே சேருவது என்பது Tamil Nadu Pension Rules 1978 – Section 10-க்கு எதிரானதாகும். மேற்படி பிரிவின்படி பணி நிறைவு பெற்றது முதல் இரண்டு வருடத்திற்கு தனியர் மற்றும் வர்த்தக பிரிவில் பணிக்கு சேரக்கூடாது. ஆனால், அவ்வாறான பணியில் சேர விருப்பப்பட்டால், அவர்கள் தமிழ்நாடு அரசிற்கு அதன் விபரத்தை எழுதி, அரசின் அனுமதி பெற்றே பணியில் சேரவேண்டும். இவ்வாறான நடைமுறையை கடைபிடிக்கமால் பணியில் சேர்ந்தது அரசுக்கு தெரியவந்தால், பென்சன் தொகையை பகுதியாக குறைத்து அரசு ஆணை பிறப்பிக்கலாம்.
No comments:
Post a Comment