Pages

Wednesday, 28 June 2023

கார் டயர்களுக்கு முறையான அளவிலான காற்று அடிப்பது அவசியம்

 சர்வீஸ் சென்டருக்கு காரை கொண்டு சென்றபோது, Manual Meter கொண்டு சரிபார்த்து, டயரில் காற்று (நைட்ரஜன்) 40 PSI இருப்பதாகவும், 32 PSI இருக்க வேண்டும் என்று, காற்றின் அளவினை 32 PSI ஆக குறைத்து விட்டார்கள்.

.
வண்டியை சர்வீஸ் ஸ்டேசனிலிருந்து எடுத்தவுடன் மிக அருகில் உள்ள பாரத் பெட்ரோலியம் பெட்ரோல் பங்கிற்கு சென்று காற்றின் அளவினை பார்த்தால், 22 PSI காண்பிக்கின்றது. அருகில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கிற்கு சென்று பார்தால் 27 PSI காண்பிக்கின்றது. இரண்டு பெட்ரோல் பங்குகளிலும் காற்று அடிப்பதற்கான மெஷினுக்கான Calibration Certificate வைத்துள்ளார்கள்.
.
1) சர்வீஸ் ஸ்டேசனில் உள்ள Manual Meter தவறானதா என்று கேள்வி எழுப்பினால், அது புதிது என்கின்றார்கள்
2) பெட்ரோல் பங்கில் அவர்களது Unit-ன் செயல்திறன் பற்றி கேள்வி எழுப்ப முடியவில்லை ஏனெனில் இரு பெட்ரோல் பங்குகளிலும் Calibration Certificate வைத்துள்ளார்கள்.
.
பாரத் பெட்ரோலியம் Calibration சரியாக இருக்கும் பட்சத்தில், மாருதி சர்வீஸ் ஸ்டேசன் அளவில் வைக்கப்பட்ட காற்றின் அளவை வைத்து காரை ஓட்டினால், டயர் தேய்மானம் அதிகமாகவும், மைலேஜ் குறைவாகவும் கிடைக்கும்.
.
Calibration Certificate சரியானதாக இருந்தால், இரண்டு பெட்ரோல் பங்குகளிலும் ஒரே அளவிலான PSI காண்பித்திருக்க வேண்டும். ஆனால், இரண்டு பங்குகளிலும் வெவ்வெறு அளவு காட்டுவதால், பெட்ரோல் பங்குகளின் calibration-யும் நம்பும்படியாக இல்லை.
ஒட்டுமொத்தமாக, எந்த Unit-ன் செயல்திறன் மற்றும் அதன் அளவுகோளில் தவறு இருக்கின்றது என்று அறியமுடியவில்லை. நமது நாட்டில் நுகர்வோருக்கு அவர்களது வாகனங்களின் டயர்களுக்கு ஏற்றும் காற்றின் அளவுகூட முறையாக கிடைப்பதில்லை.
.
இதை சாதாரண பிரச்சனையாக தினமும் கடந்து போகின்றோம். ஆனால், முறையான அளவில் காற்று டயர்களில் இல்லை என்றால், வாகனத்தின் மைமேலஜ் குறைவதால், அதிக எரிபொருள் இழப்பு ஏற்படும். அதிக எரிபொருள் இழப்பால் அதிக அளவிலான கச்சா எண்ணெய் நமது நாடு இறக்குமதி செய்ய நேரிடும் என்பதால் அது நமது நாட்டின் அன்னிய செலவாணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய அரசானது பெட்ரோல் பங்குகளில் உள்ள காற்று அடிக்கும் இயந்திரத்தை முறையாக Calibrate பண்ண அனைத்து நடவடிக்கையும் எடுக்க முன் வரவேண்டும்.

No comments:

Post a Comment