Pages

Wednesday, 28 June 2023

சமூகத்தளங்களில் வரும் அனைத்தையும் மற்றவர்க்கு ஷேர் செய்வது - மனநோய்

 ஒரு பத்திரிகையின் முகப்பு செய்தியை ஒருவர் ஷேர் பண்ணியிருந்தார். அந்த பத்திரிகையின் இணையத்தளத்தில் சென்று பார்த்தால், அது போன்ற முகப்பு செய்தியே இல்லை. அது போட்டாஷாப்பால் உருவாக்கப்பட்ட ஒரு போலியான முகப்பு செய்தி. எது வந்தாலும் அதன் உண்மையை அறிய முயற்சிக்காமல் ஷேர் செய்துவிடுவதா?

.
இன்னொரு வகையான ஆட்கள் இருக்கின்றார்கள், தினமும் வாட்ஸ்ஆப்பில் ஷேர் செய்வதை தினத்தொழிலாக வைத்திருப்பவர்கள். நாம் ஷேர் செய்யும் செய்தி, மற்றவருக்கு தேவையானதுதானா என்று சிந்திக்காமல், தொடர்ந்து குப்பையான விஷயங்களை ஷேர் செய்பவர்கள்.
.
இவ்வாறு தேவையற்ற வகையில் ஷேர் பண்ணுவது என்பது, “நாம் எந்த வகையிலாவது அனைத்து நேரங்களிலும் கவனிக்கப்பட வேண்டும்” என்ற ஒரு வகையான மனநோயாகும். மனநோய் கொண்டவராக இருந்துவிட்டு போங்கள். ஆனால், பொய்யான செய்திகளை சமூக ஊடகங்களின் வழியாக பரப்பி இந்த சமூகம் கெட்டுப்போக காரணமாக இருக்காதீர்கள்.

No comments:

Post a Comment