வாட்ஸ்ஆப்பில் தினமும் வாழ்த்து செய்திகள் அனுப்பி வருபவர்களுக்காக...இன்று நான் அவர்களுக்கு அனுப்பிய செய்தி....
.
”தினமும்
வாழ்த்துகள்
(forwarded photos) அனுப்புகின்றீ்ர்கள். மிகுந்த நன்றி. தினமும் தொடர்ந்து வாழ்த்துகள்
வரும்போது, வழக்கம்போலான வாழ்த்து செய்தியாகத்தான் இருக்கும் என்று பல நேரங்களில் அதை தவிர்த்து விடுகின்றோம். இதனால், தங்களிடமிருந்து அவசியமான செய்தி வந்திருந்தாலும், வழக்கம்போல வாழ்த்து செய்திதான் என்று அதை ஒதுக்கிவிட நேரிடலாம். ஆகவே, தங்களிடமிருந்து வரப்பெறும் முக்கியமான செய்தியை நான் தவிர்க்கும் நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக தினம் தினம் வாழ்த்து செய்திகள் அனுப்புவதை தவிருங்கள்”
No comments:
Post a Comment