Pages

Wednesday, 28 June 2023

திருமணங்களில் மொய் எழுதுவது...

 திருமணங்களில் மொய் செய்பவர்கள் பணமாக செய்ய முன் வரவேண்டும். இன்னும் எத்தனை வருடங்கள்தான் ““கடிகாரத்தையும் சுவரில் மாட்டும் படங்களையும்“ வாங்கி கொடுத்து கொண்டிருப்பார்கள். இவ்வாறு வழங்கும் பரிசுகளின் மதிப்பை மதிப்பிடமுடியாத நிலையில், திரும்ப மொய் செய்யும்போது, எந்த அளவிற்கான மொய்யை திரும்ப செய்ய வேண்டும் என்று பிரச்சனை எழுகின்றது. மொய் என்பது மணமக்களை வாழ்த்தி அளிக்கு ஒரு அன்பளிப்பு. அது ரூ.100-ஆக இருந்தாலும் அதை மணமக்கள் கையில் ரொக்கமாக கொடுப்பதுதான் நல்லது. சில சமூகத்தினர், மண்டபத்தில் வாசலில் மொய் எழுதும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஆரம்ப காலங்களில், மொய்யை மணமக்கள் கையில் கொடுக்காமல் மொய் எழுதுபவர்களிடம் சென்று கொடுத்து எழுதுவது என்பது எனக்கு சற்று சங்கடமாக இருந்தது. இப்போது, அதுவே சரியாக படுகின்றது.

No comments:

Post a Comment