Pages

Wednesday, 28 June 2023

வங்கிகளில் ஆன்-லைன் முறையில் டெபாசிட் செய்வது பற்றி...

 

வங்கிகளில் டெபாசிட் வைத்தால், அதற்கு வங்கி நிர்வாகம் F.D. Receipt வழங்கும். பின்னர் அந்த டெபாசிட் தொகையை முதிர்வு காலத்திற்கு முன் திரும்ப பெற நினைத்தாலோ அல்லது முதிர்வு அடைந்த பிறகு பெற நினைத்தாலோ, அந்த F.D. Receipt-ன் பின்பக்கம் பணத்தை வழங்குமாறு கையொப்பமிட்டு வங்கியிடம் கொடுக்க வேண்டும். அதாவது, அந்த Original FD Receipt இல்லாமல், பணத்தை திரும்ப பெற முடியாது. இந்த முறையை Conventional Method என்று அழைப்போம்.

.

இன்னொரு வகையில், ஒருவருக்கு வங்கியில் இன்டெர்நெட் பேங்கிங் வசதி இருந்தால், அவரது சேமிப்பு கணக்கில் உள்ள தொகையை, ஆன்-லைன் மூலமாக நேரடியாக டொபாசிட்டாக வைக்கலாம். இந்த முறையில், எந்தநேரத்திலும் அவ்வாறு வைத்த டெபாசிட் தொகையை ஆன்லைன் மூலமாகவே Close பண்ணிக்கொள்ளலாம். இந்த இரண்டாவது முறையை On-line method என்று அழைப்போம்.

.

இப்போது பிரச்சனைக்கு வருவோம். சமீபத்தில் ஒரு செய்தியில்,  ஒரு வங்கியில் பணி ஒய்வு பெற்ற ஒருவர் வைத்திருந்த 50 இலட்சம் அளவிலான டெபாசிட்டை யவரோ ஆன்-லைனில் இரத்து செய்து, அவரது வங்கி கணக்கில் வரவு வைத்து பின்னர் வேறு வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தது, சைபர் கிரைமின் உதவியால் முறியடிக்கப்பட்டுள்ளது. (அந்த தொகையானது எந்த வகையில் வங்கியில் வைக்கப்பட்டிருந்தது என்ற விபரம் தெரியவில்லை) மேற்படி டெபாசிட் இரத்து செய்யப்பட்டு, அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட விபரம் அந்த வாடிக்கையாளருக்கு குறுந்தகவல் வரவில்லை என்கிறார்கள். இன்று பல வங்கிகளில் குறுந்தகவல்கள் முறையாக வருவதில்லை. குறுந்தகவல்கள் மட்டுமே இது போன்ற தவறுகளை வாடிக்கையாளரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லும்.   

.

எனது எதிர்பார்ப்பு என்னவென்றால்,  Conventional Method-ல் வைக்கப்பட்ட Fixed Deposit-யானது, வங்கியில் அதன் Original FD Receipt-யை கொடுக்காமல், ஆன்-லைனில் அவற்றை Close பண்ண அனுமதிக்கக்கூடாது என்பதாகும். இந்த வகையான கட்டுப்பாடுகள் உள்ள வங்கியை மட்டுமே டெபாசிட் வைக்க மிக பாதுகாப்பானதாக நான் கருதுகின்றேன். இதை உறுதி செய்யும் விதமாக, சில வங்கிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தகவலை கேட்டதற்கு, Conventional Method-ல் வைக்கப்பட்ட வைப்பு தொகை கணக்கினை Online Method-ல் Close பண்ண முடியாது என்று பதில் அளித்துள்ளார்கள். இது போன்றே பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வங்கிகளின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும்.

No comments:

Post a Comment