Pages

Wednesday, 28 June 2023

அமெரிக்காவில் வாடிக்கையாளரே ராஜா..

 அமெரிக்காவில் நடந்த சம்பவம். சிக்கன் பீசா ஒன்று ஆர்டர் செய்யப்படுகின்றது. டெலிவரி செய்த பீசாவை திறந்து பாரக்கும்போது, அதில் சிக்கன் வழக்கமான அளவில் போடப்படவில்லை என்பதை கடைக்காரின் கவனத்திற்கு கொண்டு சென்றதற்கு, ” அந்த பீசாவில் போதுமான சிக்கன் போடப்பட்டிருக்கின்றதா என்பதைகூட உறுதி செய்ய கடைக்காரரால் வழங்கப்பட்ட பீசாவை திறந்து பார்க்க முயற்சிக்கவில்லை. மாறாக, அவர்களிடமிருந்து வந்த வார்த்தைகள் “ மன்னிக்கவும், புதிய பீசா தருகின்றோம். ஏற்கவே வழங்கியதை எங்களுடைய தவறுக்காக இலவசமாக வைத்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்ட புதிய பீசா முறையான அளவில் சிக்கன் போட்டு திரும்பவும் டெலிவரி செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் எந்த அளவிற்கு இங்கு மதிக்கப்படுகின்றார்கள் என்று பாருங்கள்.

.
நமது முகநுால் நண்பர் ஒருவர், ஒரு முறை கடையில் வாங்கிய அரிசிக்கோணிக்குள், மேல் பக்கம் நல்ல அரிசியும் உள்ளே தரமற்ற அரிசியும் இருந்ததற்காக, அந்த கடைக்காரரிடம் அரிசி மாற்றித்தர கோரியதற்கு அவர்கள் மறுத்து, அவர் நுகர்வோர் நீதிமன்றம் வரை பரிகாரம் பெற போராடியது இப்போதும் நினைக்கு வருகின்றது.
.
அமெரிக்காவில் The Customer is a king.

No comments:

Post a Comment