மருத்துவர்களானவர்கள்
பொதுவாக மற்றொரு மருத்துவருக்கே அவரது நெருங்கிய உறவினர்களுக்கோ (மனைவி, குழந்தைகள்
மற்றும் பெற்றோர்) மருத்துவ உதவி வழங்கும்போது, அதற்கு கட்டணம் வசூலிப்பதில்லை. அதை
இன்றுவரை அனைத்து மருத்துவர்களும் கடைபிடித்து வருகின்றார்கள். ஆனால், பெரிய அறுவை
சிகிச்சையின்போது, தனக்கென்று கட்டணம் வசூலிக்காமல், இதர மருத்துவ செலவினங்களுக்கு
மட்டுமே (மருந்துகள், தங்கும் செலவு) வசூலிப்பார்கள்.
.
வழக்கறிஞர் அல்லது
அவர்களின் நெருங்கிய உறவினர்களின் பிரச்சனைக்காக உயர்நீதிமன்றங்களில் தங்கள் தரப்பு
வாதத்தை முன் வைக்க, பல நேரங்களில் சீனியர்
வழக்கறிஞர்களின் (Designated Senior Advocates) உதவி தேவைப்படுகின்றது. வழக்கறிஞரானவர்களே பல நேரங்களில், சீனியர் வழக்கறிஞர்களுக்கான
உரிய கட்டணத்தை செலுத்திதான் அவர்களது சேவையை பெறும் நிலை உள்ளது. மருத்துவர்களிடையே
உள்ள மனப்பான்மை ஏன் வழக்கறிஞர் சமூதாயத்தில் இல்லை? நமக்கு, நம் சமூதாயமே உதவ தயாராக இல்லை என்றால்,
யார் உதவுவார்? தொற்றுநோய் காலத்தில், நமது சக வழக்கறிஞர் உறவுகளுக்கு உதவுவதற்காக பெரும்பாலான வழக்கறிஞர்கள் தங்களது சங்கத்திற்கும்
மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கும் பெரிய அளவில் நிதியுதவி அளித்தார்கள். இது
பாரட்டுக்குரியது. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உதவி செய்வது மட்டுமல்லாமல், வழக்கறிஞர்களாகிய
நமக்கோ அல்லது நெருங்கிய உறவினர்களுக்கோ (மனைவி, குழந்தைகள், பெற்றோர்) சட்டரீதியான பிரச்சனை வரும்போது அதை தீர்க்க,
இலவசமாகவோ அல்லது குறைந்த அளவிலான கட்டணம் பெற்றுக்கொண்டு வாதாட சீனியர் வழக்கறிஞர்கள்
முன்வந்தால் அது பாரட்டுக்குரியது. இவ்வாறு
உதவ பல சீனியர் வழக்கறிஞர்கள் தயாராக இருந்தாலும், அவர்களை அடையாளம் காண்பது என்பது கடினமாக உள்ளது.
ஆகவே, வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய
உறவினர்களுக்கு உதவிடும் வகையைில், சீனியர் வழக்கறிஞர்களை கொண்ட “வழக்கறிஞர்கள் குடும்ப
உதவி மையத்தை” உயர்நீதிமன்ற பார் அஸோசியன்களில் ஏற்படுத்த வேண்டும். அதில் இவ்வாறு
உதவிட தயாராக உள்ள சீனியர் வழக்கறிஞர்கள் தங்களை இணைத்து கொண்டு, நமது வழக்கறிஞர்களுக்கும்
அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு ஏற்படும் சட்டரீதியான பிரச்சனைகளுக்கு இலவசமாக அல்லது
கூடியமட்டும் குறைந்த கட்டணத்தில் வாதிட்டு உதவிடவேண்டும். .
No comments:
Post a Comment