Pages

Wednesday, 28 June 2023

Hire Purchase Agreement .

 

IV (2011) CPJ 67 (SC)
.
கடன் வாங்கி வாகனம் வாங்கும் ஒருவர் தனது மாத தவணையை செலுத்த முடியாத நிலையில், கடன் கொடுத்த நிறுவனம், அந்த வாகனத்திற்கு உரிமையாளர் என்ற நிலையிலும் அந்த வாகனத்தை திரும்ப எடுக்கும்போது சட்ட நடைமுறைகளை பின்பற்றியே எடுக்க வேண்டுமே தவிர அடவாடித்தனமாக எடுக்கக்கூடாது.
.
Even in case of mortgaged goods subject to Hire Purchase Agreements, recovery process has to be effected in due process of law and not by use of force Till such time as the ownership is not transferred to purchaser, the hirer normally continues to be the owner of goods but that does not entitle him on strength of agreement to take back possession by force.

IV (2012) CPJ 3 (SC) 

.
கடன் பெற்று வாகனங்கள் வாங்கும்போது, கடன் பெற்றவர் அந்த கடனை வழங்கிய financier-க்கு Trustee/Bailee ஆக இருப்பார். வாகனத்தின் உரிமையாளர் Financier ஆவார். வாகன கடனை அடைக்காமல் இருந்ததற்காக வாகனத்தினை கடன் வழங்கியவர் கைப்பற்றும்போது, கடன் கொடுத்தவர் தனது சொந்த பொருளை மீட்டெடுப்பதாகும். ஆகவே, கடன் கொடுத்தவர் மீது எந்தவித கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க முடியாது மேலும் கடன் கொடுத்தவர் வாகனத்தை மீட்டெடுப்பது என்பது அவரது உரிமை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு பகர்ந்துள்ளது.
 .
In Hire Purchase Agreement, purchaser remains merely trustee/bailee on behalf of financier/financial institution and ownership remains with latter - When vehicle is seized by financier, no criminal action can be taken against him as he is repossessing goods owned by him. Taking possession of vehicle on ground of non-payment of instalment is legal right of the financier


I (2002) CPJ 405
.
முறையீட்டாளர் hire Purchase agreement அடிப்படையில் லாரி ஒன்றை வாங்கி, அதற்கான மாதந்திர கடன் தொகையை செலுத்தாததால், கடன் கொடுத்த நிறுவனம் அந்த லாரியை கைப்பற்றி விடுகிறார்கள். இது சேவை குறைபாடா என்ற எழுவினாவிற்கு, தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையமானது, கடன் வழங்கிய நிரறுவனமே அந்த லாரிக்கு உரிமையாளர் என்றும் கடன் பெற்று லாரி வாங்கியவர்லாரியை வாடகைக்கு எடுத்தவர்என்றும், ஆகவே முறையீட்டாளரானவர் நுகர்வோர் என்ற பதத்தில் வரமாட்டார் என்றும், வாடகை பாக்கிக்காக வண்டியை கடன் கொடுத்த நிறுவனம் கைப்பற்றியது சரியயே என ஆணையிட்டுள்ளது.
.
He had purchased the lorry by entering into hire purchase agreement with the opposite parties. Under the hire purchase agreement, the complainant is after all the hirer and the opposite parties are hirees/owners. Under the agreement admittedly in case of failure of remittance of monthly installment, the hirees are entitled to seize the lorry and that sort of power the hirees/owners/opposite parties had been exercised in the lorry in question had been seized for non-payment of instalmental dues. That sort of seizure cannot at all be found fault with. Such being the case it cannot at all be stated that there is any deficiency in service on the part of the opposite parties financiers.

No comments:

Post a Comment