பாலிவுட்டில் Oh My God (OMG) என்ற படம் 2012-ம் ஆண்டு வந்தது. அதில் அக்சை குமார் மற்றும் பரேஷ்ராவல் நடித்திருப்பார்கள். பரேஷ்ராவல் ஒரு கடை வைத்திருப்பார்,
நிலநடுக்கத்தினால் அவரது கடைக்கு சேதம் ஏற்படும். அவர் கடைக்கு காப்பீடு செய்தவகையில் காப்பீடு நிறுவனத்திடம்
இழப்பீடு கேட்பார். காப்பீடு நிறுவனமாக இது இறைவனுடைய செயல் (Act of God) என்று இழப்பீடு வழங்க மறுத்துவிடும்.
பரரேஸ்ராவல் இழப்பீடு கோரி வழக்கிடுவார். வழக்கு விசாரணையின்போது, பைபிள், பகவத்கீதா மற்றும் குர்ஆன் அனைத்திலும்
“இந்த உலகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும்
இறைவனே பொறுப்பு” என்பது போன்று இருக்கும் வாசகங்களை முன் வைத்து, அவரது கடையில் ஏற்பட்ட சேசத்திற்கு கடவுளே காரணம் என்பதால் வழிபாட்டு தலங்களை நிர்வாகித்து வரும் கோவில்களையும்,
சர்ச்களையும் தர்காக்களையும்
ஒரு எதிர்மனுதாராக
சேர்த்து, அவர்களே நஷ்டத்திற்கு பணம் அளிக்க வேண்டும் என்று வாதாடுவார்.அப்போது எதிர்மனுதாரர் வழக்கறிஞர், ” ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம், கடவுள்தான் தங்கள் கடைக்கு ஏற்பட்ட சேதாரத்திற்கு
காரணம் என்றாலும்கூட,,
ஏன், கோவில், சர்ச் மற்றும் தர்காக்கள் ஏன் நஷ்டஈடு கொடுக்க வேண்டும்? என்ற கேள்வியை முன் வைப்பார். அதற்கு பரேஷ்ராவல் மேற்படி வழிபாட்டு தலங்களுக்கு கொடுத்த நன்கொடை இரசீதுகளை எடுத்து காண்பித்து, அந்த வழிபாட்டு தலங்களின் மேன்மைக்காக நான் பணம் செலுத்தியுள்ளதாலும், கடவுள் அங்குதான் இருப்பதாலும், அந்த வழிபாட்டு தலங்களை நிர்வாகிக்கும்
நபர்கள்தான் கடவுள் சார்பாக இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று வாதாடுவார். மிக அருமையான படம். இதில் அக்சைகுமார்
கடவுளாக பரேஷ்ராவல் கூடவே இருப்பார். தீங்கியல் சட்டத்தில் Act of God (இறைவனின் செயல்) என்பது நல்ல எதிர்வாதமாகவும்,
இழப்பீடு வழங்குவதற்கு
எதிராக அமையும். இந்த இறைச்செயல் என்பதை மட்டுமே கொண்டு படத்தை நகட்டி சென்றிப்பார்கள்.
No comments:
Post a Comment