பிரிவு 4-ன் படி அனைத்து அலுவலகங்களிலும் Internal Complaint Committee (ICC) என்று அலுவலகத்தால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் Presiding Officer ஆக பணியில் உள்ள மூத்த பெண் ஒருவர் இருக்க வேண்டும். பணியாட்களில் இருந்து குறைந்தது இரண்டு நபர்கள் உறுப்பினர்களாக இருக்கவேண்டும். அதில் ஒரு நபர் பெண்களின் நலனுக்காக செயல்படும் வகையிலான NGO-ல் இருந்து இருக்க வேண்டும். இவ்வாறான எண்ணிக்கையிலான நபர்களில் பாதிக்கு மேல் பெண்களாக இருக்க வேண்டும். இந்த உறுப்பினர்களின் பதவி காலம் மூன்று வருடங்களாகும்.
.
வேலைபார்க்கும்
இடத்தில் எந்த ஒரு பெண்ணிற்கும் பாலியியல்
தொந்திரவு ஏற்பட்டால், அவர் மேற்படி ICC-யிடம் புகார் அளிக்கலாம். அந்த புகாரை பிரிவு
11-ன்படி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை நிலுவையில் இருக்கும்போது, பாதிக்கப்பட்ட
பெண்ணின் வேண்டுகோளுக்கு இணங்க வேறு இடத்திற்கு அவரை பணிமாற்றம் செய்ய, அவருக்கு 3
மாதங்கள் விடுமுறை அளிக்க மற்றும் வேறு வகையிலான
பரிகாரங்களை ICC நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யலாம். விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு
தொந்திரவு கொடுத்தது உண்மை என்று நிருபணம் ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் மீது துறைவாரியான நடவடிக்கை
எடுக்கலாம் மற்றும் அவரது ஊதியத்தில் இருந்து ஒரு தொகையை பிடித்தம் செய்து பாதிக்கப்பட்ட
பெண்ணிற்கு வழங்கலாம். பிரிவு 15-ன் படி அந்த பெண்ணிற்கு இழப்பீடு வழங்கலாம். விசாரணையில்
ஒரு பெண், ஒரு ஆணின்மீது தீங்கிழைக்கும் நோக்குடன் பாலியியல் தொல்லை கொடுத்ததாக
புகார் கொடுத்தால், அந்த பெண்ணின் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும்.
.
ஒவ்வொரு அலுவலகத்திலும்
அனைவருக்கும் தெரியும் வகையிலான இடத்தில் ICC செயல்படுவதை பற்றியும், தவறு செய்பவர்களுக்கான
தண்டனைகளை பற்றியும் அறிவிப்பு பலகை வைத்திருக்க வேண்டும். இந்த சட்டத்தில் புரிதல்
ஏற்பட பணிபுரியும் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் கூட்டங்கள் நடத்த வேண்டும்.
.
நீங்கள் செல்லும் அலுவலகங்களில் இவ்வாறான ஒரு போர்டை பார்த்துள்ளீர்களா? அங்கு ICC செயல்படுகின்றதா? அதில் உள்ள உறுப்பினர்கள் யார்?, இந்த சட்டம் சம்பந்தமாக
வருடத்தில் எத்தனை கூட்டங்கள் நிர்வாகத்தால் நடத்தப்படுகின்றன? ஆகிய விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில்
கோருங்கள். இந்த சட்டத்தினை பற்றிய புரிதலை அனைவரிடம் ஏற்படுத்துங்கள்.
No comments:
Post a Comment