Pages

Sunday, 28 July 2024

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 4(1)(b)-ல் குறிப்பிட்டுள்ள தகவல்களை பெறுவது எப்படி?

 தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் முக்கிய நோக்கமான வெளிப்படைத்தன்மை என்பதை நிறைவேற்றும் பிரிவு 4(1)(b) ஆகும். இந்தப் பிரிவில் குறிப்பிட்டுள்ள தகவல்களை அனைத்து அரசு அலுவலகங்களும் தானாக முன் வந்து பொது மக்கள் அறியும் வண்ணம் அனைத்து வகைகளிலும் (அலுவலக அறிவிப்பு பலகை) மற்றும் இணையத்தளச் சேவை வழியாகவும் வெளியிடவேண்டும். தமிழக அரசானது அவர்களது https://www.tn.gov.in/rti/proactive.htm இணையத்தள முகவரியில் செயலகத்திலுள்ள அனைத்து துறைச்சார்ந்த பிரிவு 4(1)(b) விபரங்களை வெளியிட்டிருந்தாலும், பல தகவல்கள் முழுமையாகவும் மற்றும் சமீபத்திய தகவல்களாகவும் வழங்கப்படவில்லை. நிரந்திரமான தகவல்களைஅவர்கள் static என்றும் மாறுதலுக்குரியதை dynamic என்றும் வெளியிட்டுள்ளார்கள். நான் தற்போது ஒவ்வொரு துறையின் 4(1)(b) விபரங்களை கோரி இணைப்பில் கண்டவாறு மனு தாக்கல் செய்து வருகின்றேன். சட்டத்துறையானது எனது மனு கிடைக்கப்பெற்ற பிறகு, 11.06.2024 வரையிலான அவர்களது dynamic தகவல்களை update செய்து வழங்கியுள்ளார்கள்.

.

பிரிவு 4(1)(b) தகவல்களானது செயலகத்தில் உள்ள துறைகள் மட்டும் அல்ல, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்தில் இயங்கும் ஒவ்வொரு துறைகளும் பொதுமக்களின் நலன்கருதி வெளியிடவேண்டிய தகவல்களாகும். தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்களின் தலையாய கடமை என்னவெனில், ஒவ்வொரு துறையிலிருந்து அவர்களின் இணையத்தளச் சேவை அல்லது அறிவிப்பு பலகையில் பொது மக்கள் அறியும் வண்ணம் பிரிவு 4(1)(b)-ல் குறிப்பிட்ட அனைத்து தகவல்களை வெளியிடச் செய்ய முயற்சி எடுப்பதே.  பிரிவு  4(1)(b) தகவல்களை கோரும் வகையிலான மனுவினை பார்வைக்கு இணைத்துள்ளேன். 


















No comments:

Post a Comment